
கருத்தரிப்பதற்கு முயற்சிக்கும் எவருக்கும், மலட்டுத்தன்மை என்பது ஒரு தடையாக இருப்பதோடு மிகப்பெரிய பிரச்சனையாகவும் இருக்கும். அவ்வாறு இருக்கையில் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க, எளிய வகையில் உங்களுடைய உணவில் சில துணைப்பொருட்கள் மற்றும் குறிப்பாக கருத்தரிப்பதற்கான துணைப்பொருட்களை சேர்த்துக் கொள்வது நல்லது.
கருத்தரிப்பதற்கான துணைப் பொருட்கள் என்பது பெண்கள் மற்றும் ஆண்களின் கருத்தரிக்கும் தன்மையை அதிகரிப்பதற்காகவே உட்கொள்ளப்பட வேண்டிய துணைப் பொருட்கள் அல்லது மருத்துவ பொருட்களாகும். இந்த தயாரிப்புகளில் இருக்கும் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இனப்பெருக்க செயல்முறையை அதிகரிக்க உதவுகிறது.
ஒரு பெண்ணின் ஆரோக்கியத்தில் வைட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன மற்றும் இது பின்வரும் செயல்பாடுகளுக்கு முக்கியமானது:
கருமுட்டையின் தரம்
மாதவிடாய்
கருமுட்டை உற்பத்தி
தைராய்டு செயல்பாடு
ஆற்றல் உற்பத்தி
வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை போதுமான அளவு உட்கொள்வதன் மூலம் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்த முடியும். மேலும், கருவுறுதலை பாதிக்கும் பாலிசிஸ்டிக் ஓவேஷன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) அதாவது நீர்க்கட்டிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் இது குறைக்கிறது.
இதற்காகப் பயன்படுத்தக்கூடிய சில பிரபலமான துணைப் பொருட்களைப் பார்ப்போம்.
பெண்களின் உடலில் இருந்தே இந்த என்சைம் உற்பத்தி செய்யப்பட்டாலும், இதன் அளவை இரத்த ஓட்டத்தில் அதிகரிப்பதன் மூலம் பெண்களிடத்தில் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளை மேம்படுத்தலாம். 2018-ல் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, கோஎன்சைம் க்யூ 10-ஐ உட்கொண்டு செயற்கை முறையில் கருத்தரித்தரிக்க முயற்சிக்கும் பெண்களின் கருப்பை முட்டையின் தரம் அதிகரிப்பதாக காணப்பட்டது.
இது எல்-சிஸ்டைன் என்ற அமினோ அமிலத்தின் வேரியண்ட் ஆகும். இது கருத்தரிப்பதற்கான பிரபலமான ஒரு துணைப் பொருளாக அறியப்படுகிறது. ஏனெனில், இது உடலின் உட்புற செயல்பாடுகளை சரியான அளவில் பராமரிப்பதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. மேலும், இது செல்கள் சீக்கிரம் இறந்து போகாமல் தடுக்கிறது. என்-அசிடைல் சிஸ்டைன் பெண்களில் கருமுட்டை சுழற்சியை மேம்படுத்தும். அதோடு இது பிசிஓஎஸ் சிகிச்சைக்கு உதவுவதாகவும் அறியப்படுகிறது.
இது நம் உடலில் இயற்கையாக இருக்கும் ஒரு வகையான துணைப் பொருளாகும். இது கொழுப்பை ஆற்றலாக மாற்ற உதவுகிறது. இது பெண்களில் கருவுறுதலை ஊக்குவிக்கவும், ஆரோக்கியமான இனப்பெருக்க அமைப்பை மேம்படுத்தவும் பயன்படுகிறது. ஏசிஎல் ஆற்றல் மிக்க ஆக்ஸிஜனேற்றிகளைக் கொண்டுள்ளது மற்றும் பிசிஓஎஸ் மற்றும் மாதவிடாய் ஏற்படாமல் இருத்தலை சரி செய்ய உதவுகிறது, மற்றும் இனப்பெருக்க அமைப்பில் வயது தொடர்பான மாற்றத்தையும் மெதுவாக்குகிறது.
இதையும் படிக்கலாமே! - கர்ப்பம் தரிக்க எவ்வளவு காலம் ஆகும்?
இது மனித உடலில் இயற்கையாகவே காணப்படுகிறது. அதோடு இது பீன்ஸ் மற்றும் சோளம் போன்ற உணவுப் பொருட்களிலும் உள்ளது. பிசிஓஎஸ் இருக்கும் பெண்களிடத்தில் இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தும் வகையில் கருமுட்டை உற்பத்திக்கான செயல்முறையை மீட்டெடுக்கவும் குளுக்கோஸ் திசுக்களின் உட்கொள்ளலை மேம்படுத்தவும் மயோனோசிட்டால் செயல்படுகிறது என்று மருத்துவ ஆய்வுகள் காட்டுகின்றன. மயோனோசிட்டால் கருமுட்டை உற்பத்தியின் விகிதத்தை மேம்படுத்துவதோடு மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதாகவும் அறியப்படுகிறது.
செலினியம் குறைபாடு பெண்களுக்கு கருச்சிதைவுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். மேலும், இது ஆண்களிடையே விந்துவின் தரம் மற்றும் இயக்கத்தை மோசமானதாக்கும். இது ஒரு முக்கியமான கனிமமாகும். ஆரோக்கியமான இனப்பெருக்க அமைப்பை பராமரிக்க இது மிகவும் அவசியம். பெண்களின் முட்டைகளைச் சுற்றியுள்ள ஃபாலிகுளார் (நுண்ணறை) திரவத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க இது உதவுகிறது என்று 2019 ஆம் ஆண்டில் மேற்கொண்ட ஒரு ஆய்வு காட்டுகிறது. இது தவிர, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது மற்றும் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது.
நீங்கள் வேறு ஏதேனும் மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்தால், கருத்தரிப்பதற்கான துணைப்பொருட்கள் அதனோடு சேர்ந்து ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். அதே சமயம் இந்த துணைப்பொருட்களை நீங்கள் நீண்ட காலம் எடுத்துக்கொண்டால் அது உங்களுடைய இனப்பெருக்கம் செய்வதற்கான ஆரோக்கியத்தைப் பாதிக்கும். எப்போதும் துணைப்பொருட்களை சாப்பிடுவதற்கு முன்பு நீங்கள் உங்களுடைய மருத்துவரை அணுகி சசமச்சீர் உணவை பின்பற்றுவது நல்லது.
fertility supplements in tamil, informations about fertility supplements in tamil, fertility supplements meaning in tamil, uses of fertility supplements in tamil, Before You Take Fertility Supplements to Get Pregnant In English, Before You Take Fertility Supplements to Get Pregnant In Hindi, Before You Take Fertility Supplements to Get Pregnant In Telugu, Before You Take Fertility Supplements to Get Pregnant In Bengali

Mylo Ovaluna Female Fertility Tablets - 60 Capsules
Improves Egg Health & Folate Levels |Improves Reproductive Health & Hormonal Balance



Yes
No


















Everything is going well and I am staying very positive today.
Clean and easy pills for a healthy and balanced life today.
I trust this brand and I am very happy with it.
Now I'm 5th month pregnancy thn scan report said in ur baby head near cyst so it's any problem?
Mam I am 8 month pregnancy so ennaku konjam yoga dips venum
மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்
3 மந்த் பேபி எப்படி இருக்கும்
அடிக்கடி அடி வயிற்று வலி ரொம்ப வலியா இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.


Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |